தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Kerala Coronavirus Update on today date 3rd May

கேரளாவில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று ஒரேநாளில் 26 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 26 ஆயிரத்து 11 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 19 ஆயிரத்து 519 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 13 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
2. டெல்லி: 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது
டெல்லியில் 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா
டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
4. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 15 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது.