தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே - சிவராஜ் சிங் சவுகான் + "||" + Madhya Pradesh government has declared all accredited journalists as frontline workers: CM Shivraj Singh Chouhan

கொரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே - சிவராஜ் சிங் சவுகான்

கொரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே -  சிவராஜ் சிங் சவுகான்
கொரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்கள் தான் என மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
போபால்,

மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட இயலமால் போய்விட்டது. 

இது தொடர்பாக மத்திய அரசு, சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தொடர்புகொண்டோம். எனினும் தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி வழங்க இயலாது என்று அவர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் புதிதாக 12,662 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 5,75,706-ஆக அதிகரித்துள்ளது. அப்போது பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்கள் தான் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது - ம.பி. முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
2. பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம்: ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.