தேசிய செய்திகள்

மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு + "||" + All written exams scheduled for May have been postponed

மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு

மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு
மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்குடன் கூடிய புதிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. அதனால் கடந்த ஆண்டை போலவே பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. 

அரியானா, பீகார், ஒடிசா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தேர்வை நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.