தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 59 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் + "||" + Maharashtra reports 48,621 new Coronavirus Cases in a Single Day

மராட்டியத்தில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 59 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

மராட்டியத்தில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 59 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டியத்தில் உச்சமடைந்திருந்த கொரோனா தற்போது மெல்லமெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 71 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 59 ஆயிரத்து 500 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 41 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 567 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் எந்த நன்மையும் இல்லை - எய்ம்ஸ் இயக்குனர்
லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் நன்மையும் இல்லை என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று ஒரேநாளில் 26 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
4. டெல்லி: 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது
டெல்லியில் 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா
டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.