தேசிய செய்திகள்

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு மேலும் 4 மாதம் தள்ளிவைப்பு + "||" + NEET PG 2021 Exam POSTPONED by 4 months, will not be held before Aug 31

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு மேலும் 4 மாதம் தள்ளிவைப்பு

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு மேலும் 4 மாதம் தள்ளிவைப்பு
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு மேலும் 4 மாதம் தள்ளிவைக்கப்படுகிறது.
புதுடெல்லி, 

நாட்டில் நடப்பு சூழ்நிலையில், ஏராளமான டாக்டர்கள் கொரோனா தொடர்பான பணிகளுக்கு தேவைப்படுகின்றனர்.

இந்நிலையில், ‘நீட்’ முதுநிலை தேர்வு எழுதவுள்ள மருத்துவ மாணவர்களை அப்பணியில் இணையும்படி கேட்டுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.

தொலை மருத்துவம், லேசான கொரோனா பாதிப்பு போன்றவற்றைக் கவனித்துக்கொள்வதற்கு இறுதியாண்டு மருத்துவ மாணவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம், அது டாக்டர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் என கருதப்படுகிறது.

எனவே மருத்துவ மாணவர்களுக்கான முதுநிலை ‘நீட்’ தேர்வு குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. வருகிற ஆகஸ்டு 31-ந் தேதிக்கு முன் அத்தேர்வு நடத்தப்படாது.

தேர்வு நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக அது குறித்து அறிவிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பணிகளில் குறைந்தது 100 நாட்கள் ஈடுபட்டவர்களுக்கு வருங்காலங்களில் அரசு நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.