தேசிய செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி: பீகாரில் உள்விளையாட்டு மைதானம் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம் + "||" + Bihar: Patna's Patliputra Indoor Stadium has been converted into 110-bedded COVID hospital; the facility to be made functional soon

கொரோனா பரவல் எதிரொலி: பீகாரில் உள்விளையாட்டு மைதானம் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம்

கொரோனா பரவல் எதிரொலி: பீகாரில் உள்விளையாட்டு மைதானம் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பீகாரில் உள்விளையாட்டு மைதானம் ஒன்று கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
பாட்னா,

இந்தியாவில் கொரோனா தனது கோரப்பிடியை இறுக்கி உள்ளது. கொரோனா முதல் அலையில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து இருந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் இருந்து சற்று குறைந்து இருந்த கொரோனா தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

இந்த முறை கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. இந்த அலையில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகிறார்கள். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் வருகின்றனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு மைதானம் 110 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. எல்லா படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. 110 படுக்கைகளுக்கு வென்டிலேட்டர் வசதி உள்ளது. 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மைதானம் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல்: கோவில்பட்டியில் 11 கடைகள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக கோவில்பட்டியில் 11 கடைகள் மூடப்பட்டன.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு: அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - தலைமை செயலாளர் உத்தரவு
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
4. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா பரவல் எதிரொலி: பெரிய மார்க்கெட் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு
கொரோனா பரவல் எதிரோலியாக பெரிய மார்க்கெட் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.