தேசிய செய்திகள்

தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + Removal of Rules of Electoral Conduct from the 5 States where the election took place; Election Commission Notice

தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
புதுடெல்லி,

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.  இவற்றில் அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியிருந்தது.  அதன்படி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும், பணம், நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் பறக்கும் படைக்கு வழங்கப்பட்டு இருந்தது.

தேர்தலில் முறைகேடாக பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  எனினும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், 5 மாநில தேர்தல் நடந்து முடிந்து கடந்த 2ந்தேதி அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடந்தது.  அதன் முடிவுகள் அடுத்தடுத்து வெளிவந்தன.  இதனை தொடர்ந்து தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளை நீக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி நாளை போடப்படாது; கர்நாடக அரசு திடீர் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி வராத நிலையில் 18-44 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் நாளை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என கர்நாடக சுகாதார மந்திரி கேட்டு கொண்டுள்ளார்.
2. ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ளலாம் ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு
தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம் உள்பட 8 மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
3. தி.மு.க. சார்பில் வழங்கப்படுகிறது கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கனடா பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
4. ஒடிசாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவிப்பு
ஒடிசாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என முதல் மந்திரி அறிவித்துள்ளார்.
5. கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள இந்திய அரசுக்கு உதவ தயார்: சீனா அறிவிப்பு
கொரோனாவின் 2வது அலையை எதிர்கொள்ள இந்திய அரசுக்கும், மக்களுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என சீனா தெரிவித்து உள்ளது.