உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது; ஒருவர் உயிரிழப்பு + "||" + Corona exposure is low in the UK; One fatality

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது; ஒருவர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது; ஒருவர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புகளின் 2வது அலை தீவிரமடைந்த சூழலில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) பாதிப்பு எண்ணிக்கை 1,649 ஆக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று கொரோனா பாதித்த ஒருவர் மரணமடைந்து உள்ளார்.  அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 28 நாட்களில் உயிரிழந்து உள்ளார்.  கொரோனா பாதிப்புகளால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,27,539 ஆக உயர்ந்து உள்ளது.

அந்நாட்டில் 5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இந்த புதிய முன்னேற்றத்தினை முன்னிட்டு அடுத்த மாதத்தில் இருந்து ஒரு மீட்டர் சமூக இடைவெளி விதி தளர்வுபடுத்தப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.

எனினும், அதனை உறுதியாக இப்பொழுது கூற முடியாது என தெரிவித்து உள்ளார்.  தடுப்பூசிகளை மக்கள் எடுத்து கொள்ள முன்வர வேண்டும் என்றும் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.  தளர்வுகளை மெல்ல அமல்படுத்தும் அந்நாட்டு அரசு ஜூன் 21ந்தேதி சமூக தொடர்புக்கான அனைத்து சட்டப்பூர்வ கட்டுப்பாடுகளையும் நீக்கும் என திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

எனினும், தடுப்பூசிகள் பயன் ஒருபுறம் இருப்பினும், புதிய வகை கொரோனா வைரஸ்கள் தோன்றி வரும் சூழலில் ஐரோப்பிய கண்டத்தில் பெருந்தொற்றின் 3வது அலைக்கான சாத்தியம் இன்னும் குறையவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம்
கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
2. கொரோனா பாதிப்பு: கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம்
கொரோனா பாதிப்பு காரணமாக கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.
3. குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி
4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தெரிவித்து உள்ளார்.
4. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு
இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
5. பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு பலி
பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.