மாநில செய்திகள்

அதிமுகவுடன் அமமுக இணையுமா? - கடம்பூர் ராஜூ பேட்டி + "||" + AIDMK with AMMK Join? - Interview with Kadampur Raju

அதிமுகவுடன் அமமுக இணையுமா? - கடம்பூர் ராஜூ பேட்டி

அதிமுகவுடன் அமமுக இணையுமா? - கடம்பூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணையுமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கயத்தாறு,

கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி தொகுதியில் செய்த பணிகள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளுக்காக பொதுமக்கள் எனக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றியை வழங்கி உள்ளனர். இதற்காக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கேட்டு நிறைவேற்றினோம். இனி 5 ஆண்டு காலமும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை போராடி பெற்று தருவேன். 

கோவில்பட்டி தொகுதியை சிறப்பான தொகுதியாக மாற்றுவதற்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணையுமா? என்று கேட்கிறீர்கள். இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.