தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; பா.ஜ.க. அலுவலகம், கடைகள் சூறையாடல் + "||" + Thrown country bombs on BJP Office, looting shops in West Bengal

மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; பா.ஜ.க. அலுவலகம், கடைகள் சூறையாடல்

மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; பா.ஜ.க. அலுவலகம், கடைகள் சூறையாடல்
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. அலுவலகம் மற்றும் கடைகள் மீது 15க்கும் கூடுதலான நாட்டு வெடிகுண்டுகள் வீசி, அடித்து நொறுக்கப்பட்டன.
நார்த் 24 பர்கனாஸ்,

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ந்தேதி நடத்தப்பட்டது.  இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பட்பாரா பகுதியில் கோஷ்பரா சாலையில் அமைந்துள்ள பா.ஜ.க. அலுவலகம் மற்றும் கடைகள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று (திங்கட்கிழமை) திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 15க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு உள்ளன.  இந்த வன்முறையில், பா.ஜ.க. அலுவலகம் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதற்கு பின்னணியில் திரிணாமுல் காங்கிரசார் உள்ளனர் என கடைக்காரர்களும் கூறியுள்ளனர்.  ஆனால், திரிணாமுல் காங்கிரசின் உள்ளூர் தலைவர் இதனை முற்றிலும் மறுத்துள்ளார்.  பா.ஜ.க.வினரே இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளனர் என கூறியுள்ளார்.

நாங்கள் பா.ஜ.க.வின் ஆதரவாளர்கள் என்பதனால் அவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அவர்கள் மைனாரிட்டி சமூகத்தினர்.  அரை மணிநேரம் கழித்து போலீசார் வந்தனர்.  வெடிகுண்டுகள் வீசியதில் பல மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்து உள்ளன.  2 வெடிக்காத வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன என கடைக்காரரான ராகுல் குமார் ஷா கூறியுள்ளார்.

இதேபோன்று ஹவுரா நகரிலும் பா.ஜ.க. அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறியுள்ளார்.