தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி + "||" + Italy Sends Experts; Oxygen Generation Plant, 20 Ventilators To Help India Fight Covid Pandemic

அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி

அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை இத்தாலி அனுப்பியது.
புதுடெல்லி,

இந்தியா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. 

அந்த வரிசையில் இத்தாலி ஆக்சிஜன் உற்பத்தி அலகு மற்றும் 20 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவ நிபுணர்கள் குழுவையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இத்தாலி விமானப்படைக்கு சொந்தமான ஏ.சி.130 ரக விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு நேற்று டெல்லி வந்தடைந்தது. 

ஒட்டுமொத்த ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட இத்தாலியின் ஆக்சிஜன் உற்பத்தி அலகு நொய்டாவில் உள்ள ஐடிபிபி ஆஸ்பத்திரியில் நிறுவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று: கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் மூடல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. குஜராத்தில் மேலும் 11,017- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
குஜராத்தில் மேலும் 11,017- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் 176 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா தொற்று பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
இந்தியாவில் 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.