உலக செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டம் + "||" + UK plans to send another 1000 ventilators to India for corona treatment

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டம்

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டம்
கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை விரைவில் அனுப்ப இங்கிலாந்து அர்சு திட்டமிட்டுள்ளது.
லண்டன்,

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன. அந்தவகையில் கொரோனா சிகிச்சைக்காக 200 வென்டிலேட்டர்கள், 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் என ஏராளமான தளவாடங்களை இங்கிலாந்து அனுப்பி வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மேலும் 1000 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தீவிர கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்திய ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கும் வகையில் இந்த வென்டிலேட்டர்கள் அனுப்பப்படும் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதைப்போல கொரோனா தடுப்பு பணிகளில் இந்திய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக உயர்மட்ட ஆலோசனைக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும் எனவும், இதில் இந்திய சுகாதாரத்துறையில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள், மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெறுவர் எனவும் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க வேண்டுகோள்
கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா சிகிச்சைக்கான புதிய தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுபாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
3. கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
கொரோனா சிகிச்சை பணியில் ராணுவம் உதவ வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
4. கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுங்கள்-யூரியா தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
5. கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் - இந்திய ரயில்வே துறை தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.