தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும் முறை; முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆலோசனை + "||" + Home isolation of corona patients; Advised by CM Kejriwal

கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும் முறை; முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆலோசனை

கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும் முறை; முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆலோசனை
கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும் முறையை வலுப்படுத்துவது பற்றி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்,
கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறும் முறையை வலுப்படுத்துவது பற்றி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, தலைமை செயலாளர், சுகாதார முதன்மை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறும் முறையை வலுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  இதனால், சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும்.  நல்ல சிகிச்சை கிடைக்கும்.  அவர்களுடன் தொடர்பிலும் இருக்க முடியும் என கூறியுள்ளார். 

இதேபோன்று எத்தனை கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்கிறார்கள்? எத்தனை பேருக்கு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்படுகிறது என்பது பற்றிய தெளிவான பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின், கலெக்டர்களுடன் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்கள் உடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
2. நோயாளிகளுக்கு தங்கு, தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் அதிகாரிகளுக்கு, மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தங்கு, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
3. சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ஆலோசனை
சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
4. மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை
மு.க.ஸ்டாலின் உடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்பட அதிகாரிகள் சந்தித்தனர். கொரோனாவை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
5. பதவியேற்பு எளிமையாக நடைபெறும்.. எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு - மு.க.ஸ்டாலின்
பதவியேற்பு எளிமையாக நடைபெறும் என்றும், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.