மாநில செய்திகள்

நாகர்கோவில்-பெங்களூரு ரெயில் நாளை முதல் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Nagercoil-Bangalore train to be canceled from tomorrow - Southern Railway announcement

நாகர்கோவில்-பெங்களூரு ரெயில் நாளை முதல் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாகர்கோவில்-பெங்களூரு ரெயில் நாளை முதல் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நாகர்கோவில்-பெங்களூரு ரெயில் நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், கீழ்க்கண்ட ரெயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-நாகர்கோவில் (வண்டி எண்: 07235), கண்ணூர்-யஸ்வந்த்பூர் (06538) இடையே இயக்கப்படும் ரெயில்கள் நாளை (5-ந்தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

* நாகர்கோவில்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (07236), இடையே இயக்கப்படும் ரெயில் வருகிற 6-ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. யஸ்வந்த்பூர்-கண்ணூர் (06537) இடையே இயக்கப்படும் ரெயில் இன்று (4-ந்தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.