பிற விளையாட்டு

இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தாருக்கு கொரோனா பாதிப்பு; ஐ.சி.யூ.வில் அனுமதி + "||" + Corona damage to Indian archer Jayantha Talukdar; Admission to ICU

இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தாருக்கு கொரோனா பாதிப்பு; ஐ.சி.யூ.வில் அனுமதி

இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தாருக்கு கொரோனா பாதிப்பு; ஐ.சி.யூ.வில் அனுமதி
கொரோனா பாதித்த இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த கொரோனா பாதிப்புகள் நேற்று சற்றே குறைந்தன.  இந்நிலையில், ஒரே நாளில் 3.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை தெரிவித்தது.

இதனால், 1.99 கோடி பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.  3,417 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இந்நிலையில், இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐ.சி.யூ. பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதனை இந்திய வில்வித்தை கூட்டமைப்பு அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.  அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் அதிகாரி தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது; ஒருவர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
2. இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம்
கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
3. கொரோனா பாதிப்பு: கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம்
கொரோனா பாதிப்பு காரணமாக கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.
4. குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி
4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தெரிவித்து உள்ளார்.
5. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு
இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.