தேசிய செய்திகள்

தடுப்பூசி தொழில் நுட்பங்களை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல் + "||" + Vaccination techniques should be shared by the nations of the world - Nirmala Sitharaman Instruction

தடுப்பூசி தொழில் நுட்பங்களை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

தடுப்பூசி தொழில் நுட்பங்களை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
தடுப்பூசி தொழில் நுட்பங்களை பகிர வேண்டும் எனவும், தடுப்பூசியில் தேசியவாதம் இருக்க முடியாது எனவும் உலக நாடுகளுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

ஆசிய வளர்ச்சி வங்கியின் கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மெய்நிகர் முறையில் உரையாற்றினார். அப்போது அவர் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான அறிவுசார் சொத்துரிமையின் வர்த்தக அம்சங்களுக்கான 1995-ம் ஆண்டின் ஒப்பந்தம் (டிரிப்ஸ்) குறித்து பேசினார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசி தொழில் நுட்பங்களை குறித்தும் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தடுப்பூசி அடிப்படையிலான தொழில்நுட்பங்களை பகிர்வதற்கு நாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் டிரிப்ஸ் ஒப்பந்தத்தை நாம் அணுக வேண்டும்.

தடுப்பூசியில் தேசியவாதம் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் நாடுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். கொரோனாவை கையாளுவதற்கு உலகளாவிய பலதரப்பு அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது. திறந்த தன்மை, வெளிப்படைத்தன்மை, நேர்மை, நிலைத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கைகளின் அடிப்படையில் கொரோனாவுக்கு பிந்தைய எதிர்காலம் இருக்க வேண்டும்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதாரத்தின் சக்கரங்களை இயங்க வைப்பதற்காக பல்வேறு துறைகளுக்கு நிதி உதவியை அரசு வழங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில், இந்த கொரோனா காலத்தில் இந்த துறைகளுக்கு உதவுவதற்காக ரூ.3 லட்சம் கோடி கடன் உத்தரவாத அடிப்படையில் அரசு நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

பருவநிலை மாற்றத்தை பொறுத்தவரை, பாரீஸ் ஒப்பந்த அடிப்படையிலான அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதில் இந்தியா உறுதிப்பாட்டுடன் உள்ளது. அவற்றை நிறைவேற்றுவது நிச்சயமாகவே நல்லது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை உலகில் 29 நாடுகள் தொடங்கியுள்ளன. இந்தியா பின்தங்குகிறதா...?
உலகில் 29 நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளன. விரைவில் இந்தியாவில் தடுப்பூசி செயல்முறை தொடங்க உள்ளது
2. புதிய வகை கொரோனா வைரஸ்: உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் இங்கிலாந்து
புதிய வகை கொரோனா பாதிப்பு காரணமாக, இங்கிலாந்து நாடு உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது.