தேசிய செய்திகள்

கேரளாவில் பணியாளர்கள், முதலாளிகள் இரட்டை முக கவசம் அணிய வேண்டும்; முதல் மந்திரி அறிவுறுத்தல் + "||" + In Kerala, employees and employers are required to wear double faced armor; Instruction of the CM

கேரளாவில் பணியாளர்கள், முதலாளிகள் இரட்டை முக கவசம் அணிய வேண்டும்; முதல் மந்திரி அறிவுறுத்தல்

கேரளாவில் பணியாளர்கள், முதலாளிகள் இரட்டை முக கவசம் அணிய வேண்டும்; முதல் மந்திரி அறிவுறுத்தல்
கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க இரட்டை முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
திருவனந்தபுரம்,

கேரளாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  கொரோனா பரவலை தடுக்க அரசும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.  இந்நிலையில், கேரளாவில் கொரோனா பரவலை தடுத்திட இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி முதல் மந்திரி பினராயி விஜயன் தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து நடவடிக்கைகளிலும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று கூறினார்.

இதன்படி, மாநில, மத்திய அரசு நிறுவனங்கள், அதன் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்கள், அத்தியாவசிய சேவை பிரிவுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மட்டும் அலுவலகத்தில் பணிபுரிவார்கள் என தெரிவித்துள்ளார்.

அவசியமான ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், அத்தியாவசிய சேவை தொடர்பாக பணிபுரியும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் பணியாற்றலாம் என்றும் தெரிவித்தார்.

ஆக்சிஜன் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரம் துறையில் பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் அடையாள ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என கூறினார்.  தொலை தொடர்பு சேவை, உள்கட்டமைப்பு, இணைய சேவை வழங்குபவர்கள், பெட்ரோல், எல்பிஜி அத்தியாவசிய சேவை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து வகையான திரைப்பட மற்றும் சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  திருமணத்தில் அதிக பட்சம் 50 பேரும், இறுதி சடங்கில், அதிகபட்சம் 20 பேரும் கலந்து கொள்ளலாம் என கூறினார்.

நோயாளிகளும் அவர்களது தோழர்களும் அவசரகாலத்தில் பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.  அனைத்து நிறுவனங்களிலும் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இரட்டை முக கவசம் அணிய வேண்டும் என்றும், கடைகள், உணவகங்கள் இரவு 9 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இருந்து கிளம்புவது நல்லது; குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
2. அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட்டு, தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
3. மாணவ-மாணவிகள் கல்வி தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தல்
தமிழக அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வி தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தினார்.
4. தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தல்
தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தினார்.
5. பயிர் சேதம் கணக்கெடுப்பு: தகுதியான எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதம் கணக்கெடுப்பின் போது, தகுதியான எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது என்று வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.