தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 24 பேர் உயிரிழந்த விவகாரம்; அரசின் படுகொலை என சித்தராமையா குற்றச்சாட்டு + "||" + 24 killed in Karnataka; Siddaramaiah accused of state assassination

கர்நாடகாவில் 24 பேர் உயிரிழந்த விவகாரம்; அரசின் படுகொலை என சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகாவில் 24 பேர் உயிரிழந்த விவகாரம்; அரசின் படுகொலை என சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகாவில் நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகாவில் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர்.  இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து, முதல் மந்திரி எடியூரப்பா மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசினார்.  இது தொடர்புடைய அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றும் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான சித்தராமையா, கர்நாடகாவில் நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என வலியுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்பொழுது, அது வெறும் மரணம் அல்ல.  அரசால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை.  இந்த மரணங்கள் பற்றி நீதிமன்ற விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறேன்.  உண்மை வெளிவரட்டும் என கூறியுள்ளார்.

இதன்பின் டுவிட்டரில் சித்தராமையா வெளியிட்ட பதிவில், அரசு செய்த படுகொலைகளுக்காக முதல் மந்திரி எடியூரப்பா மற்றும் சுகாதார மந்திரி கே. சுதாகர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாக உள்ளது என தொடர்ச்சியாக அவசர அழைப்புகள் வந்தபடி உள்ளன.  சாமராஜநகர் மருத்துவமனையில் நடந்தது போல் மற்றொரு சம்பவம் நடக்க நாங்கள் விரும்பவில்லை.  ஒவ்வொரு வாழ்வும் விலைமதிப்பற்றது.

எனவே, அரசால் தொடர்ந்து படுகொலைகள் நடக்காமல் தடுக்க முதல் மந்திரி எடியூரப்பா மற்றும் சுகாதார மந்திரி கே. சுதாகர் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

எனினும் அவர்களில் 18 பேர் இணை நோய் கொண்டவர்கள்.  அவர்கள் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.  இதுபற்றி அடுத்த 3 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி அரசு கேட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெயர் பட்டியலில் தே.மு.தி.க. வேட்பாளரின் இனிசியல் மாற்றி அச்சடிப்பு அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
பெயர் பட்டியலில் தே.மு.தி.க. வேட்பாளரின் இனிசியல் மாற்றி அச்சடிப்பு அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
2. இலங்கை, தைவான் நாடுகளின் புகைப்படங்களை காண்பித்து அசாம் என்கிறது காங்கிரஸ்; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இலங்கை, தைவான் நாடுகளின் புகைப்படங்களை அசாம் என காண்பித்து புண்படுத்தும் செயலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது என பிரதமர் மோடி பேரணியில் பேசியுள்ளார்.
3. ஜெர்மனி போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி; பா.ஜ.க. குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு
ஜெர்மனியில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பாகிஸ்தான் கொடியை காட்டியது என்ற பா.ஜ.க. குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
4. மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்
மியான்மரில் ராணுவத்தால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங்சான் சூகி மீதான புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
5. டெல்லி போலீசார் மீது தவறான குற்றச்சாட்டு; காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பத்திரிகையாளர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு
டெல்லி போலீசார் மீது தவறான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததற்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.