தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணம் + "||" + Two more die due to lack of oxygen in Bangalore, Karnataka

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
சாம்ராஜ் நகர், 

சாம்ராஜ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா நோயாளிகள் உள்பட 24 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துவிட்டதாக புகார் எழுந்தது. இறந்தவர்களின் குடும்பத்தினர் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு ஒரு புறம், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று கூறி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமே நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 149 ரன்கள் எடுத்துள்ளது.
2. ஐபிஎல் கிரிக்கெட் 2021: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. ஏப்ரல் 1-ந் தேதி முதல் வெளிமாநிலத்தினர் பெங்களூரு வர கட்டுப்பாடு; ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்து இருந்தால் மட்டுமே ஏப்ரல் 1-ந் தேதி முதல் பெங்களூருவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
4. கொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக உருமாறி வருவதாக ஆய்வில் தகவல்
பெங்களூரு ஆய்வு செய்யபட்ட கொரோனா மாதிரிகள் தலா 11 பிறழ்வுகளைக் காட்டுகின்றன; வைரஸ் முன்பை விட வேகமாக ஒருமாறி வருவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.
5. கர்நாடக மாநிலம் முழுவதும் 42 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.