தேசிய செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி + "||" + 'Full lockdown' is the only way to stop Covid-19 spread: Rahul Gandhi

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி

கொரோனா பரவலை தடுக்க  முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. 

 எனினும், தொற்று பரவல் குறையாமல் உள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த யோசித்து வரும்  மத்திய அரசு, பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.  

 "நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனாவால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்” என தனது டுவிட் பதிவில் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. "ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும்" - கமல்ஹாசன்
பேரிடர் காலத்தை மனதில் கொண்டு மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. எச்சரிக்கைகளை புறக்கணித்தது, கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு மீது லான்செட் விமர்சனம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
3. 2.6 கோடி தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும்; கெஜ்ரிவால் கோரிக்கை
கொரோனாவின் கோரப்பிடியில் டெல்லி சிக்கித்தவிக்கிறது.
4. தடுப்பூசி போடுவதில் 2-வது தவணைக்காக காத்திருக்கும் பயனாளிகளுக்கு முன்னுரிமை; மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பூசி போடுவதில் 2-வது தவணைக்காக காத்திருக்கும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
5. மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
மத்திய விஸ்டா திட்டத்துக்கு செலவிடுதை விட மக்கள் மீது கவனம் செலுத்துங்க்ள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.