மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் முக்கிய ஆலோசனை + "||" + Corona prevention work: MK Stalin's key advice on becoming chief minister again

கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் முக்கிய ஆலோசனை

கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் முக்கிய ஆலோசனை
கொரோனா தடுப்பு பணி தொடர்பாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை, 

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. 

இதனிடையே, நேற்று மாலை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளரும், சுகாதாரத்துறை செயலாளரும் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வருகிற 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் எல்.முருகன் சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தற்போது முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து பேசி வருகிறார்.
4. இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றும் தமிழக அரசு உறுதி - கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை
கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
5. கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.7,544 கோடி செலவு செய்யப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.7,544 கோடி செலவு செய்யப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.