தேசிய செய்திகள்

டெல்லியில் ஆட்டோ ரிக்‌ஷா, டாக்சி ஓட்டுநர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி: கெஜ்ரிவால் + "||" + All autorickshaw drivers and taxi drivers in Delhi will be given Rs 5000 each by Delhi govt so that they get a little help during this financial crisis: Delhi CM Arvind Kejriwal

டெல்லியில் ஆட்டோ ரிக்‌ஷா, டாக்சி ஓட்டுநர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி: கெஜ்ரிவால்

டெல்லியில் ஆட்டோ ரிக்‌ஷா,  டாக்சி ஓட்டுநர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி: கெஜ்ரிவால்
டெல்லியில் ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார இழப்பை சநதித்துள்ள ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் டேக்ஸி டிரைவர்களுக்கு ரூ 5 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த தொழிலாளர்களுக்கு சிறிய உதவியாக இந்தத் தொகை இருக்கும் எனவும் கெஜ்ரிவால் தனது அறிவிப்பின் போது கூறினார்.  

அதேபோல், அடுத்த இரு மாதங்களுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் இலவசமாக பொருள்கள் வழங்கப்படும் என்றார். டெல்லியில் அடுத்த வாரம் திங்கள் கிழமை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா விவகாரம்: இந்தியாவுக்கு உதவ தயார்: சீன அதிபர் ஜி ஜிங்பிங்
இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
2. டெல்லியில் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்- கெஜ்ரிவால்
டெல்லியில் புதிதாக 44 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
3. டெல்லியில் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: கெஜ்ரிவால்
டெல்லியில் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
4. மும்பையில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
நாட்டின் நிதி தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் கொரோனா பரவல் தற்போது குறையத்தொடங்கியுள்ளது.
5. ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமரிடம் தெரிவித்த கருத்துகளை கெஜ்ரிவால் வெளியிட்டதால் சர்ச்சை
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரம் பெற்றுவரும் நிலையில், நேற்று பிரதமர் மோடி, கொரோனா பரவல் அதிகமாக உள்ள 10 மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றார்.