மாநில செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு + "||" + Udayanithi Stalin's meeting with DMDK leader Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
சென்னை, 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்சாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார். 

தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக இந்த முறை ஆட்சியமைக்கிறது. வரும் 7-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்துக்களையும் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். 
  
முன்னதாக திமுக வெற்றி குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டரில், “சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍. தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்
இன்று முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.