மாநில செய்திகள்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது + "||" + The meeting of DMK MLAs began under the chairmanship of DMK President Stalin

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த வெற்றியின் மூலம் திமுக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட 125 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக சின்னத்தில் போட்டியிட்ட வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட 8 கூட்டணி கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், நாளை மாலை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியார் சாலை பெயர் மாற்ற விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. திமுக தலைவர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு குமரியில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்
குமரியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
3. நாளை மறுநாள் தொடங்க இருந்த திமுக தலைவர் ஸ்டாலினின் 6-ம் கட்ட சுற்றுப்பயணம் ரத்து
நாளை மறுநாள் தொடங்க இருந்த திமுக தலைவர் ஸ்டாலினின் 6-ம் கட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.