தேசிய செய்திகள்

கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதார அமைச்சர் தகவல் + "||" + No person has died due to oxygen shortage in the state: Goa Health Minister Vishwajit Rane

கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதார அமைச்சர் தகவல்

கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதார அமைச்சர் தகவல்
கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தகவல் தெரிவித்துள்ளார்.
கோவா,

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசின் கோரப்பிடியில் சிக்கி நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. 

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள பல மாநிலங்களில் நோயாளிகளின் பெருக்கத்தால் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. 

இந்நிலையில், கோவா மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே கூறியதாவது:-

கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது, ஆனால் தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய ஆக்சிஜன் பயன்பாட்டை நாங்கள் சரி செய்து வருகிறோம். மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலி
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. கோவா மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்
கோவா மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
3. ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமரிடம் தெரிவித்த கருத்துகளை கெஜ்ரிவால் வெளியிட்டதால் சர்ச்சை
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரம் பெற்றுவரும் நிலையில், நேற்று பிரதமர் மோடி, கொரோனா பரவல் அதிகமாக உள்ள 10 மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றார்.
4. கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் - கோவா அரசு
கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
5. கோவாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கோவாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.