தேசிய செய்திகள்

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிப்பு - மத்திய மந்திரி தகவல் + "||" + Increase in Remdecivir Drug Production - Federal Minister Announcement

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிப்பு - மத்திய மந்திரி தகவல்

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிப்பு - மத்திய மந்திரி தகவல்
ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்து தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை ராஜாங்க மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கடந்த ஏப்ரல் 12-ந் தேதியையொட்டி மாதம் 37 லட்சம் குப்பிகளாக இருந்த ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி, மே முதல் வாரத்தில் சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு 1.05 கோடி குப்பிகளாக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு நாடு முழுவதும் 20 உற்பத்திக்கூடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ரெம்டெசிவிர், தற்போது 57 உற்பத்திக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதை உற்பத்தி செய்யும் திறன் 3 மடங்கு அதிகரித்துள்ளது. விரைவிலேயே நம்மால், அதிகரித்திருக்கும் தேவைக்கு ஏற்ப இம்மருந்தை வழங்க இயலும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து மத்திய அரசு கடுமையாகப் போராடி வருகிறது.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வார்தாவில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தொடங்க வாய்ப்பு மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
வார்தாவில் இன்று முதல் ரெம்டெசிவிர் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
2. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க 2-வது நாளாக அலைமோதிய கூட்டம்
தொடர்ந்து 2-வது நாளாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
3. ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறை - மராட்டிய அரசு முடிவு
நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறையை அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது.