மாநில செய்திகள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலி; ஆக்சிஜன் தட்டுப்பாடு என குற்றச்சாட்டு + "||" + 4 killed at Chengalpattu Government Hospital; Accused of lack of oxygen

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலி; ஆக்சிஜன் தட்டுப்பாடு என குற்றச்சாட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலி; ஆக்சிஜன் தட்டுப்பாடு என குற்றச்சாட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செங்கல்பட்டு,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.