தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு + "||" + for corona treatment Deposit of foreign relief items to 31 states

கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியவுடன், வெளிநாடுகள் கொரோனா நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கத் தொடங்கின. முதலில், மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த பொருட்களை கையாண்டது.

அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இதற்கென தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. இப்பிரிவு, நிவாரண பொருட்களை பெறுவதையும், அதை மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதையும் கவனித்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து 24 வகையான பொருட்கள் வந்துள்ளன. இவற்றின் மொத்த எண்ணிக்கை சுமார் 40 லட்சம் ஆகும். ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள், ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர், பேவிபிரவிர் ஆகிய மருந்துகள், முக கவசங்கள், தனிநபர் கவச உடைகள் ஆகியவை முக்கியமான பொருட்கள்.

எந்தெந்த மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள், எந்த மாநிலத்துக்கு தேவை அதிகமாக இருக்கிறது என்ற அடிப்படையில் பார்த்து, இப்பொருட்களை மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது.

இதுவரை, தமிழ்நாடு உள்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெளிநாட்டு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டம்
கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை விரைவில் அனுப்ப இங்கிலாந்து அர்சு திட்டமிட்டுள்ளது.
2. கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க வேண்டுகோள்
கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா சிகிச்சைக்கான புதிய தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுபாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
4. கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
கொரோனா சிகிச்சை பணியில் ராணுவம் உதவ வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
5. கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுங்கள்-யூரியா தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளன.