உலக செய்திகள்

நேபாளத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் மே 12 வரை தடை உத்தரவு நீட்டிப்பு + "||" + Corona vulnerability on the rise in Nepal; Extension of restraining order till May 12

நேபாளத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் மே 12 வரை தடை உத்தரவு நீட்டிப்பு

நேபாளத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் மே 12 வரை தடை உத்தரவு நீட்டிப்பு
நேபாளத்தில் கொரோனா பாதிப்பு உயர்வை அடுத்து ஒரு வார காலத்திற்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
காத்மண்டு,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  அந்நாட்டின் சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 7,660 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  55 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,51,005 ஆகவும் மொத்த உயிரிழப்பு 3,417 ஆகவும் உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமடைந்த சூழலில், இந்தியாவுடனான 22 எல்லைகளை மூடுவதாக நேபாள அரசு அண்மையில் அறிவித்தது.  இந்தியா மற்றும் நேபாளம் இடையே 13 எல்லை பகுதிகளில் மட்டுமே தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், காத்மண்டு, பக்தபூர் மற்றும் லலித்பூர் ஆகிய மாவட்டங்களின் தலைமை மாவட்ட அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று நடந்தது.  இதன் முடிவில், கடந்த ஏப்ரல் 29ந்தேதி முதல் விதிக்கப்பட்டு அமலில் உள்ள தடை உத்தரவை வருகிற மே 12ந்தேதி வரை நீட்டிக்க முடிவானது.

இதன்படி, காத்மண்டு பள்ளத்தாக்கில் உணவு மற்றும் மளிகை கடைகள் காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.  அனைத்து வகையான தனியார் மற்றும் பொது வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

நேபாளத்தில் வங்கிகள், நிதி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மொத்த ஊழியர்களில் 4ல் ஒரு பங்கு ஊழியர்களே பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்பத்திரிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் தேவை; நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் உள்பட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை
நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி தி்ட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் உள்பட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை எதிரொலி; வெள்ளிக்கிழமையான நேற்றே காசிமேடு மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். முககவசம் அணியாதவர்களிடம் போலீசார் ரூ.200 அபராதம் வசூலித்தனர்.
3. புதுவையில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை; ஊரடங்கு கட்டுப்பாடுகள் 3-ந்தேதி வரை நீட்டிப்பு; மதுக்கடைகளும் மூடப்படும்
புதுச்சேரியில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை விதிப்பதுடன், வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும். மதுக்கடைகளும் மூடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
4. துபாயில் இருந்து 2 டேங்கர்கள்: அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லி வந்தடைந்தன
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லி கொண்டு வரப்பட்டன.
5. கேரளாவில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2-வது அலை காரணமாக அங்கு நேற்று மட்டும் 13 ஆயிரத்து 644 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.