தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு உயர்வு: ஆந்திர பிரதேசத்தில் வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு + "||" + Corona vulnerability on the rise: Andhra Pradesh extends lockdown till 18th

கொரோனா பாதிப்பு உயர்வு: ஆந்திர பிரதேசத்தில் வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு

கொரோனா பாதிப்பு உயர்வு:  ஆந்திர பிரதேசத்தில் வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 20,034 பேர் பாதிப்படைந்தும், 82 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.  இதனால் மொத்த பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 11,84,028 ஆகவும், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,289 ஆகவும் உள்ளது.

இதனையடுத்து தலைமை செயலாளர் அனில் குமார் சிங்கால் ஒப்புதலுடனான உத்தரவின்படி இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும்.  வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும்.

எனினும் மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் மற்றும் குறிப்பிட்ட அத்தியாவசிய சேவை வினியோகத்திற்கு தடை இருக்காது.  144 தடை உத்தரவின் கீழ் 5 பேருக்கு மேல் ஒன்றாக சேர்ந்து செல்ல கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: நிதிஷ் குமார் அறிவிப்பு
பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
2. பிரேசிலில் மேலும் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பிரேசில் உள்ளது.
3. இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தாருக்கு கொரோனா பாதிப்பு; ஐ.சி.யூ.வில் அனுமதி
கொரோனா பாதித்த இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது; ஒருவர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
5. இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம்
கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.