மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை + "||" + For those affected by corona Sidda, case seeking setting up of homeopathy specialty hospital - hearing in iCourt today

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம் ஆகியவை மக்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ உதவுகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.

அலோபதி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய-மாநில அரசுகள், சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

தற்போது கொரோனா பரவல் தீவிரமாகியிருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 பேர் பலி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,232 ஆக அதிகரித்து உள்ளது.
3. பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது: தமிழகத்தில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
5. 90 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.