தேசிய செய்திகள்

டெல்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; நோயாளிகள் அனைவரும் மீட்பு + "||" + Sudden fire at hospital in Delhi; All patients recover

டெல்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; நோயாளிகள் அனைவரும் மீட்பு

டெல்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; நோயாளிகள் அனைவரும் மீட்பு
டெல்லியில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருந்து அனைத்து நோயாளிகளும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ள சூழலில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் காணப்படுகிறது.  கொரோனா தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கையாக போடப்பட்டு வரும் தடுப்பூசிகளும் கிடைக்காமல் பற்றாக்குறை நிலை உள்ளது.

இந்த நிலையில், டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் யூ.கே. நர்சிங் ஹோம் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த மருத்துவமனையில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  

இதுபற்றிய தகவல் டெல்லி தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது-  உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைத்து கட்டிடத்தில் சிக்கிய நோயாகள் அனைவரையும் மீட்டு உள்ளனர்.  அனைத்து நோயாளிகளும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு விட்டனர் என டெல்லி தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கார்க் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம்
கொரோனா சிகிச்சை பிரிவில் தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.
2. தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் எந்திரங்கள் எரிந்து நாசமாயின
3. ஆப்கானிஸ்தானில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர்.
4. குஜராத் தீ விபத்து: முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு; பிரதமர் மோடி இரங்கல்
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவித்து உள்ளார்.
5. குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள் உள்பட 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.