உலக செய்திகள்

நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு + "||" + The PM of New Zealand decided to get married in the summer

நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு

நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு
நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளார்.
ஆக்லாந்து,

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் ஜெசிந்தா ஆர்டென் (வயது 40).  தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு (வயது 44) என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கோடை காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வது என திட்டமிட்டு உள்ளார்.  எனினும், திருமண தேதியை அவர் வெளியிடவில்லை.

இதுபற்றி ஆர்டென் கூறும்பொழுது, திருமணத்திற்கான தேதி கிடைத்து விட்டது.  இந்த அறிவிப்பினால் நாங்கள் அனைவரிடமும் திருமண தகவலை கூறிவிட்டோம் என்று அர்த்தமல்ல.  அதனால், முறைப்படி அழைப்பு விட வேண்டும்.  எனினும், திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் மிக இளம்வயது பிரதமரான ஆர்டென் கடந்த 2017ம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்தபொழுது பிரதமர் பொறுப்பேற்று கொண்டார்.  இந்த தம்பதிக்கு 2 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அக்டோபரில் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்பி வைக்க வங்காளதேசம் முடிவு
ரெம்டெசிவிர் உள்பட பிற மருந்து பொருட்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு வங்காளதேசம் அனுப்பி வைக்கிறது.
3. கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் 30ந்தேதி வரை இலங்கையில் அனைத்து பள்ளிகளையும் மூட முடிவு
இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வால் வருகிற 30ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன.
4. ஆக்சிஜன் தயாரிப்பு பணிக்கு தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
ஆக்சிஜன் தயாரிப்பு பணிக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
5. கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன், மருந்துகளை வழங்க ஜெர்மனி முடிவு
ஜெர்மனி கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை வழங்குகிறது.