தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க அரசு முடிவு + "||" + Government decides to postpone Class 12 examination in Karnataka

கர்நாடகாவில் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க அரசு முடிவு

கர்நாடகாவில் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க அரசு முடிவு
கர்நாடகாவில் 11ம் வகுப்பு மாணவர்களை நேரடியாக 12ம் வகுப்புக்கு தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,

நாட்டில் மராட்டியத்திற்கு அடுத்து அதிக அளவாக கர்நாடகாவில் (44,438 பேருக்கு) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.  இதுபற்றி கர்நாடக கல்வி மந்திரி சூரியநாராயண சுரேஷ் குமார் கூறும்பொழுது, 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன.  11ம் வகுப்பு மாணவர்களை நேரடியாக 12ம் வகுப்புக்கு தரம் உயர்த்த முடிவு செய்துள்ளோம்.  கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, 2ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக வாரிய தேர்வுகளையும் தள்ளி வைப்பது என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.  கொரோனா பாதிப்புகளில் இருந்து மாணவர்களை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டவ்தே புயல்: குஜராத்தில் 1.5 லட்சம் பேரை இடமாற்றம் செய்ய முடிவு
டவ்தே புயலை முன்னிட்டு குஜராத்தில் கடலோர பகுதியில் உள்ள 1.5 லட்சம் பேரை முன்னெச்சரிக்கையாக இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
2. சட்டசபை பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
தமிழக சட்டசபை பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
3. கொரோனா அச்சம்: மீரட்டில் 280 கைதிகளை ஜாமீனில் விடுவிக்க முடிவு
கொரோனா அச்சம் எதிரொலியாக மீரட் சிறையில் இருந்து 280 கைதிகளை ஜாமீன் அல்லது பரோலில் விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
4. இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் முடிவு
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
5. நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு
நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளார்.