உலக செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா + "||" + US reports 42 k new Covid-19 cases

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை இன்னமும் உலுக்கி வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும்  ஜுலை மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளதாக  ஜோபைடன் தெரிவித்துள்ளார். 

ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுபுறம் தொற்று பரவலும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்  42 ஆயிரத்து 354- பேருக்கு அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அதேபோல், தொற்று பாதிப்பால்  853- பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 74 ஆயிரத்து 659-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 5 லட்சத்து 92 ஆயிரத்து 409- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: நிதிஷ் குமார் அறிவிப்பு
பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
2. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.‌ கொரோனா உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
4. தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் பிரபல புகைப்படம் ரூ. 3.5 கோடிக்கு ஏலம்
தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
5. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம்
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.