தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் + "||" + Corona prevention measure: Union Cabinet meeting this morning chaired by Prime Minister Modi

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை
சென்னையில் ஊரடங்கின் போது, தேவை இல்லாமல் ஊர் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்கிய பிறகு தேவை இல்லாமல் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச்செல்ல ’ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரெயில்களை இயக்க ரெயில்வே நடவடிக்கை
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச்செல்வதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
3. சீர்காழியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
சீர்காழியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.
4. முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூல் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் சென்னையில் நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது.
5. கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு மும்பையில் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
மும்பையில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.