தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசு + "||" + New Rules For Covid Testing Introduced By Government

கொரோனா பரிசோதனைக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசு

கொரோனா பரிசோதனைக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசு
கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ள நிலையில், கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணிகள் நல்ல உடல் நிலையுடன் இருந்தால் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.  

கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் உள்ளதால் நாடு முழுவதும் உள்ள  2,500 - மேற்பட்ட ஆய்வுக்கூடங்களில் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இல்லாதவர்களும் தங்கள் பயணங்களின் போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
2. உத்தர பிரதேசத்தில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை: யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
3. மராட்டியத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு 144- தடை உத்தரவு- உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு 144- தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
4. கேரளாவில் மேலும் 5,063- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,063-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா ஒருநாள் பாதிப்பு; உலக அளவில் முதலிடத்தில் இந்தியா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உள்ளது.