தேசிய செய்திகள்

ஒடிசாவில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: இன்று முதல் அமலுக்கு வந்தது + "||" + Odisha lockdown comes into effect: Religious places, malls closed; grocery, meat shops open

ஒடிசாவில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: இன்று முதல் அமலுக்கு வந்தது

ஒடிசாவில்  2 வாரங்களுக்கு ஊரடங்கு: இன்று முதல் அமலுக்கு வந்தது
கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பால் ஒடிசாவில் இன்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தில்  கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் 2-வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்தார்.  

இதன்படி, இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கானது வரும் 19 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.  கடும் கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் போக்குவரத்து சிலவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், இறைச்சிக்கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் துணை சிறைச்சாலையில் உள்ள 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
ஒடிசா மாநிலத்தில் உள்ள உதாலா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் அமலானது இரண்டு வார முழு ஊரடங்கு: கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் விவரம்
தமிழகத்தில் இரண்டு வார முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது காய்கறி-மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்: இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது : நடிகர் சித்தார்த் டுவிட்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா தொற்று
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.