தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 338 பேர் பலி + "||" + 19,953 new corona infections in Delhi: another 338 killed

டெல்லியில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 338 பேர் பலி

டெல்லியில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 338 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், நேற்று சற்று குறைவாக பதிவாகி இருந்தது. 

இந்நிலையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 19,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,32,942 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 338 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,752 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 18,788 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11,24,771 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 90,419 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் புதிதாக 17,364 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 332 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் ஊடக பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் அனைத்து ஊடக பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
3. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ‘10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்’; பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேட்டி
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் தெரிவித்தார்.
4. டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
டெல்லியில் இன்று மேலும் 18,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது.