தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 'டிஸ்சார்ஜ்’ + "||" + Maharashtra reports 62,194 new Coronavirus Cases in a Single Day

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 'டிஸ்சார்ஜ்’

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 'டிஸ்சார்ஜ்’
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 842 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டியத்தில் உச்சமடைந்திருந்த கொரோனா தற்போது மெல்லமெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 62 ஆயிரத்து 194 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 42 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 39 ஆயிரத்து 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 842 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 27 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 853 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 73 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. கேரளாவில் இன்று 12 ஆயிரம் பேருக்கு கொரோனா - 136 பேர் பலி
கேரளாவில் இன்று 12 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று உறுதியானதால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்
கியூபாவின் ‘அப்தலா' தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டதாக பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.