தேசிய செய்திகள்

டெல்லிக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் கெஜ்ரிவால் கோரிக்கை + "||" + Kejriwal requests to central government to provide additional vaccines to Delhi

டெல்லிக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லிக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் கெஜ்ரிவால் கோரிக்கை
மத்திய அரசு டெல்லிக்கு 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து, படுக்கைகள் உள்ளிட்டவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பாதிப்புகள் மேலும் மோசமடைந்துள்ளன.

இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று காணொலி காட்சி வழியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “டெல்லியில் அனைவருக்கும் போடுவதற்கு 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வேண்டும். 40 லட்சம் டோஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாத காலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மாதம் ஒன்றுக்கு 85 லட்சம் தடுப்பூசி என்ற அளவில் மத்திய அரசு வினியோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது டெல்லியில் நாள்தோறும் 1 லட்சம் டோஸ் போடப்படுவதாகவும், இதை 3 லட்சமாக உயர்த்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் - அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்
இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
2. தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்திற்கு ஜூன் மாத இறுதிக்குள் 42.58 தடுப்பூசிகள் வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கேரளாவிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரளாவிற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.