தேசிய செய்திகள்

ஜப்பான் அனுப்பிய 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை + "||" + 100 Oxygen Concentrators Sent by Japan arrived to India by Air

ஜப்பான் அனுப்பிய 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

ஜப்பான் அனுப்பிய 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை
இந்தியாவிற்கு ஜப்பான் அரசு சார்பில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் ஜப்பான் அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. இது தவிர செக் குடியரசு மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம் மேலும் நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக ஜப்பானின் 21 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
2. டோக்கியோ பயணிகள் ரெயிலில் கத்திக் குத்து தாக்குதல்; 10 பேர் காயம்
ஜப்பான் தலைநகரும் தற்போது 32-வது ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வரும் நகருமான டோக்கியோவில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.
4. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்தியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
5. ஜப்பானின் 3 மாகாணங்களில் கனமழை: 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
ஜப்பானின் 3 மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் காரணமாக, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.