மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol and diesel prices remain unchanged today

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதியில் இருந்து 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்து வந்தது.

நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.15-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.86.65-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசு அதிகரித்துள்ளது.
2. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஒட்டன்சத்திரம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
5. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.