தேசிய செய்திகள்

இந்தியாவில் நேற்று வரை 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் + "||" + Health department informs 17 crore vaccine doses have been administered in India till yesterday

இந்தியாவில் நேற்று வரை 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் நேற்று வரை 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் நேற்று வரை கொரோனா தடுப்பூசியின் 17 கோடி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த பிறகு, தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் மே 9(நேற்று) இரவு 8 மணி நிலவரப்படி, மொத்தம் 17 கோடியே 1 லட்சத்து 53 ஆயிரத்து 432 டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கடந்த 1 ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை அவர்களுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் நேற்றை கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
2. இந்தியாவில் 40 பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. நிரவ் மோடியின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது இங்கிலாந்து ஐகோர்ட்
, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மறைவாக இருந்த நீரவ் மோடியை, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர்.
4. இந்தியா 170- ரன்களுக்கு ஆல் அவுட்- நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 139-ரன்கள்
இன்னும் 55 ஓவர்கள் வீசப்பட வேண்டியுள்ளதால், இந்திய அணி டிரா செய்ய கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது.
5. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று போட்டியை டிரா செய்யும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது