தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 27 ஆயிரம் பேருக்கு கொரோனா - 65 பேர் பலி + "||" + Kerala Coronavirus Update on today date 10th May

கேரளாவில் இன்று 27 ஆயிரம் பேருக்கு கொரோனா - 65 பேர் பலி

கேரளாவில் இன்று 27 ஆயிரம் பேருக்கு கொரோனா - 65 பேர் பலி
கேரளாவில் இன்று 27 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, கேரளாவில் இன்று 27 ஆயிரத்து 487 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 30 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 31 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 4 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 99 ஆயிரத்து 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. கேரளாவில் இன்று 12 ஆயிரம் பேருக்கு கொரோனா - 136 பேர் பலி
கேரளாவில் இன்று 12 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று உறுதியானதால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்
கியூபாவின் ‘அப்தலா' தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டதாக பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.