தேசிய செய்திகள்

கொரோனா தாக்குதலுக்கு ரெயில்வே ஊழியர்கள் 1,952 பேர் உயிரிழப்பு + "||" + 1,952 Employees Have Died Of Covid Till Now, 1,000 Infected Daily: Railways

கொரோனா தாக்குதலுக்கு ரெயில்வே ஊழியர்கள் 1,952 பேர் உயிரிழப்பு

கொரோனா தாக்குதலுக்கு ரெயில்வே ஊழியர்கள் 1,952 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தினமும் சராசரியாக 1,000 ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவி வந்த தொற்று நேற்று சற்று குறைந்து 3 லட்சத்து 53 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் ரெயில்வே துறையில் பணியாற்றி வரும் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அதனால், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் செய்வதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இந்திய ரெயில்வே துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களில் இதுவரை 1,952 பேர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், தினமும் சராசரியாக 1,000 ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது என ரெயில்வே நிர்வாகத்தின் மூத்த அதிகாரி சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.

ரெயில்வே ஊழியர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை ரெயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்
கியூபாவின் ‘அப்தலா' தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டதாக பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.
2. கர்நாடகாவில் மேலும் 3,709- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 3,709-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கோவேக்சின் 77.8% செயல் திறன் கொண்டது எனத் தகவல்
கோவேக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. ஜூன் 21: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 7 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று 6 ஆயிரம் பேருக்கு கொரோனா - 94 பேர் பலி
மராட்டியத்தில் இன்று 6 ஆயிரத்து 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.