தேசிய செய்திகள்

ஒடிசாவில் துணை சிறைச்சாலையில் உள்ள 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 21 inmates of sub jail in Odisha

ஒடிசாவில் துணை சிறைச்சாலையில் உள்ள 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

ஒடிசாவில் துணை சிறைச்சாலையில் உள்ள 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
ஒடிசா மாநிலத்தில் உள்ள உதாலா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2வது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 9,793 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உதாலா துணை சிறைச்சாலையில், கடந்த சனிக்கிழமையன்று சிறைக்கைதிகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிலருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து உதாலா நகர மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து 79 சிறைக்கைதிகளுக்கு பரிசோதனை செய்ததில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து உதாலா சிறையின் நிர்வாக அதிகாரி வித்யாதர் தண்டபாத் கூறுகையில், “தொற்று பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான முறையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம். தேவைப்பட்டால் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு அனுப்பிவைப்போம். சிறைச்சாலை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஒடிசா மாநிலத்தில் தற்போது 69,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஒடிசா: புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - மத்திய மந்திரி
யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
3. ஒடிசாவை நெருங்குகிறது ‘யாஸ் புயல்’ - கனமழை கொட்டுகிறது
அதிதீவிரம் அடைந்த ‘யாஸ்’ புயல் இன்று ஒடிசா, மேற்கு வங்காளத்துக்கு இடையே கரையை கடக்கிறது.
4. ஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 8- பேரை தேடும் பணி தீவிரம்
ஒடிசாவின் சிலேரு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
5. கொரோனா கட்டுப்பாட்டை மீறி ஒடிசாவில் சகோதரரின் திருமணத்தில் நடனமாடிய பெண் தாசில்தார்
ஒடிசா மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.