தேசிய செய்திகள்

தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள்: நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு + "||" + Andhra Pradesh govt has called for global tenders for procuring Coronavirus vaccines

தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள்: நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு

தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள்: நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு
மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய ஆந்திர அரசு உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள் விட்டுள்ளது.
ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் சூழ்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க ஒரேவழியாக கருதப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்கிக்கொள்ள மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ஏதுவாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கி வரும் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் ஆந்திர பிரதேச அரசும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது.

இந்த ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்க உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆந்திர அரசு இது தொடர்பாக தொடர்பாக 3 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசி கொள்முதலை விரைவில் நடைமுறை படுத்த இந்த 3 வாரகாலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் ஒரேநாளில் 1,203 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் ஒரேநாளில் 1,203 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்ப்பட்டது
2. கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர்.
3. தடுப்பூசிக்காக பல மணிநேரம் காத்திருக்கும் பொதுமக்கள்- கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். எனவே கூட்டம் கூடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
4. 320 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளம் அருகே நடைபெற்ற முகாமில் 320 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை: அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு உறுதி
ஆண்கள் அல்லது பெண்களிடம் தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான ஆதாரம் இல்லை என மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.