தேசிய செய்திகள்

கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் + "||" + Pinarayi Vijayan Writes To PM Narendra Modi, Demands 300 MT Oxygen

கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பும் படி பிரதமர் மோடிக்கு முதல்மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனுக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.

இதற்கிடையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால், அங்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தின் தினமும் 212 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், இன்னும் சில நாட்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பும் படி பிரதமர் மோடிக்கு முதல்மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அறிவியல் ரீதியிலான கணக்கீட்டின் படி கேரளாவில் மருத்து ஆக்சிஜனின் தினசரி தேவை அடுத்த மூன்று நாட்களில் 423 மெட்ரிக் டன் என்ற அளவில் அதிகரிக்கலாம். கேரளாவில் தற்போது தினமும் 212 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாநிலத்தில் 14 மற்றும் 15-ம் (இன்றும்,நாளையும்) தேதிகளில் சூறாவளிப்புயல் மற்றும் கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மற்றும் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களில் மின் தடை ஏற்படலாம். இதனால், ஆக்சிஜன் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டலாம்.

இதனால், கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்க வேண்டும். ஆக்சிஜன் தேவையை மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் மாநில அரசால் பூர்த்தி செய்ய முடியாது கேரளாவுக்கு ஒதுக்கப்படும் தினசரி ஆக்சிஜன் அளவு 450 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட வேண்டும் என்று முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.    

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று உறுதியானதால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
2. கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்
கியூபாவின் ‘அப்தலா' தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டதாக பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.
3. கர்நாடகாவில் மேலும் 3,709- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 3,709-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கோவேக்சின் 77.8% செயல் திறன் கொண்டது எனத் தகவல்
கோவேக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5. ஜூன் 21: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 7 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.