தேசிய செய்திகள்

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார் + "||" + Modi talks to 100 district collectors caught in the grip of Corona

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்
கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவின் மோசமான பிடியில் 10 மாநிலங்கள் சிக்கி உள்ளன. அவை மராட்டியம், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகும்.

இந்த மாநிலங்கள்தான் தினசரி பாதிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. நேற்றும் இவை 72 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன.

கொரோனாவால் நேற்று பலியானோர் எண்ணிக்கையிலும் 10 மாநிலங்களே முக்கிய பங்கு ( 74.30 சதவீதம்) வகிக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பேச முடிவு

இந்தநிலையில் கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேச முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 18-ந் தேதியும், 20-ந் தேதியும் 2 கட்டங்களாக பிரதமர் மோடி இந்த கலந்துரையாடலை நடத்துகிறார்.

நாடு கொரோனாவுக்கு எதிராகப்போராடி வரும் நிலையில் இப்படி மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேசப்போவது இதுவே முதல் முறை ஆகும்.

முதல் கட்டமாக 18-ந் தேதியன்று, 9 மாநிலங்களின் 46 மாவட்ட கலெக்டர்களுடனும், 2-வது கட்டமாக 20-ந் தேதியன்று 54 மாவட்ட கலெக்டர்களுடனும் மோடி பேசுகிறார்.

இது காணொலி காட்சி வழியாக நடைபெறும்.

எதிர்பார்ப்பு

அப்போது பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தற்போதைய தொற்று பரவல் நிலவரத்தையும், சுகாதார கட்டமைப்பு வசதிகளையும் கேட்டறிவதோடு, கட்டுப்படுத்துவதற்கு சில ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. “மக்களின் தவறான எண்ணத்தை மாற்றுங்கள்” - இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் மோடி உரையாடல்
காவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் என இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
2. செயல்திறனை அளவுகோலாக வைத்து பார்த்தால் மோடியைத்தான் முதலில் நீக்கி இருக்க வேண்டும்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கருத்து
செயல்திறனை அளவுகோலாக வைத்து பார்த்தால், பிரதமர் மோடியைத்தான் முதலில் நீக்கி இருக்க வேண்டும் என்று மத்திய மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
3. மோடி, நிதிஷ்குமார் அரசுகளை விமர்சித்த லாலு பிரசாத்
லாலு பிரசாத் யாதவ், நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களிடையே அரசியல் பேசினார். அவர் மோடி, நிதிஷ்குமார் அரசுகளை விமர்சித்தார்.
4. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரியை குறைக்குமாறு பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
5. பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவருடன் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு
உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவரை இன்று சந்தித்து பேசுகிறார்.